கல்முனை இலங்கை வங்கி மூடப்பட்டுள்ளது.

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை இலங்கை வங்கி இன்றிலிருந்து மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
கொரோனா தொற்றாளரோடு சம்மந்தப்பட்ட ஒருவர் இன்று வங்கி நடவடிக்கைகளுக்காக வந்து சென்றதை அடுத்து இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

PCR அறிக்கை வரும் வரைக்குமான காலப்பகுதியில் வங்கி நடவடிக்கைகள் நடைபெறாது.
எனினும் வங்கி தன்னியக்க வங்கிச் சேவை தொடர்ந்தும் நடைபெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.