காத்தான்குடி மக்களுக்கு காத்தான்குடி பிரதேச செயலாளர் விடுக்கும் ஒரு செய்தி

ரீ.எல்.ஜவ்பர்கான்
காத்தான்குடி மக்களுக்கு நடமாடும் சேவையின் மூலம் அத்தியாவசியப் பொருட்களை (பல சரக்கு மற்றும் மரக்கறிகள்) விற்பணை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்த வியாபாரிகளுக்கும் இன்று காலை அண்டிஜன் பரிசோதனையும் செய்யப்பட்டுள்ளது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் அனுமதி வழங்கப்படும் வியாபாரிகளுக்கு சுகாதார வைத்திய அதிகாரி ஊடாக சுகாதார துறை சம்பந்தமான விடயங்களும் பிரதேச செயலாளர் ஊடாக விலைகள் மற்றும் தரம் சம்பந்தமான விடயங்கள் மிகக் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும் என வியாபாரிகளுக்கு காத்தான்குடி பிரதேச செயலகத்தில் வைத்து இன்று வெள்ளிக்கிழமை வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அந்த விடயங்களை ஏற்றுக்கொண்ட வியாபாரிகளே வீதிவீதியாக மக்களுக்கான பொருட்களை விற்பனை செய்யவுள்ளனர்.
பொருள்களின்  தரத்தில் குறைவானதாக அல்லது அதிக விலையிலோ விற்பனை செய்யும் போது கிராம உத்தியோகத்தர் இடம் விளக்கமான முறையில் பொது மக்கள்  அறிக்கை செய்யலாம் என காத்தான்குடி பிரதேச செயலாளர் யு.உதய சிறீதர் தெரிவித்துள்ளார்.