யுத்தகாலத்தில்அடையாள அட்டை எவ்வளவு முக்கியமானதே அதைவிட முக்கியமானது முககவசங்கள்

மாகாணப்பணிப்பாளர் அ.லதாகரன்
(கனகராசா சரவணன், ரீ.எல்.ஜவ்பர்கான்)
 யுத்தகாலத்தில்அடையாள அட்டை எவ்வளவு முக்கியமானதே அதைவிட முக்கியமானது முககவசங்களை அணிவது என கிழக்கு மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் காரியாலயத்தில் இன்று செவ்வாய்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
முககவசம் சரியான முறையில் அணியவேண்டும். சுகாதார துறை என்ற வகையில் எங்களுக்கு எந்தவித பாகுபாடும் இல்லை எங்களுடைய ஒரே ஒரு குறிக்கோள் தொற்றானதை கிழக்கு மாகாணத்தினுள் உள்நுழைவதை தவிர்க்கவேண்டும் அவ்வாறு தவிர்க்கப்படும் பட்சத்தில் தொற்று உள்வாங்கப்பட் நபரில் இருந்து மற்றவர்களுக்கு தொற்றாமல் தவிர்க்கவேண்டும்.
அதுவும் முடியவில்லை என்றால் தொற்று  குறிப்பிட்ட பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்துக்கு  பரவாமல் தடுக்கவேண்டும் என்ற ரீதியில் பொதுவானதாக எந்தவித மத, இன. வேறுபாடுகளும் இன்றி நாங்கள் தொடர்ச்சியாக செய்துவருகின்றோம்
கிழக்கில் இன்று வரை 1061 கொரோனா அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. கல்முனை 1,2,3  கல்முனைக்குடி 1.2.3 ஆகிய கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தல்  பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.கிழக்கில் 12 மணிநேரத்தில் 41 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்  என்றார்.