உடன் அமுலுக்கு வரும் வகையில் கல்முனை முடக்கம்

யு.எம்.இஸ்ஹாக்)
கல்முனை பிராந்தியத்தில் உடன் அமுலுக்கு வரும் வரையில் தனிமைப்படுத்தல் சட்டம் கல்முனை பொலிஸாரினால் அமுல் படுத்தப்பட்டுள்ளது

கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 11 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக கல்முனை செய்லான வீதி தொடங்கி வாடி வீட்டு வரையிலான தமிழ் முஸ்லிம் பிரதேசங்கள் உள்ளடங்கலாக கல்முனை பொதுச் சந்தை உட்பட உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப் படுத்தப்பட்ட பிரதேசமாக கல்முனை பொலிஸாரினால் முடக்கப்பட்டுள்ளது.
கல்முனை பிரதேசத்தில் கொரனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை அடுத்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது