ஊழியருக்கு கொரனா தொற்று மட்டு சிற்றி சென்றருக்கு பூட்டு

மட்டக்களப்பு நகரில் இயங்கிவந்த பிரபல சிற்றி சென்றர் குறிப்பிட்ட நிறுவனத்தால் தற்காலிகமாக மூடப்பட்டதையடுத்து அங்கு பணிபுரியும் ஊழியருக்கு இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் நிறுவனம் சில நாட்களுக்கு மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட நிறுவனத்தில் வேலைசெய்யும் ஆரையம்பதியைச்சேர்ந்த பணியாளர் ஒருவருக்கு கொரனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து பிராந்திய சுகாதாரப்பணிப்பாளரிடம் நாம் கேட்டபோது நிறுவனம் ஏற்கனவே உரிமையாளர்களினால் சுயவிருப்பின் பேரில் மூடப்பட்டிருந்ததாகவும்  அங்குள்ள ஊழியருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து ஏனைய ஊழியர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் பணிப்பாளர் நா.மயூரன் மேலும் தெரிவித்தார்.