கதிரவன்
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு மருத்துவர்கள் கொரனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் இரு மருத்துவர்கள் கொரனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதில் ஒரு வைத்தியர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கடமை நிமித்தம் இவர் கண்டல் காடு கொவிற் மருத்துவமனைக்குசென்று வந்திருந்தார்.
நேற்று மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அறிகுறிகள் இருப்பது கண்டு கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பிட்ட வைத்தியர்கள் திருகோணமலை பொது வைத்தியசாலையில் மார்பு நோய் சிகிச்சை நிலையத்திலும், காது மூக்கு தொண்டை சிகிச்சைப்பிரிவிலும் கடமையாற்றுபவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று திருமலை மாவட்டத்தில் மூதூர் பிரதேசத்தில் 05பேரும் திருகோணமலை சுகாதாரபிரிவில் 02 பேரும் இனம் காணப்பட்டுள்ளனர். திருகோணமலையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை மூதூர் பிரதேசத்தில் குடும்பநல மருத்துவிச்சி ஒருவரும் தொற்றுக்குள்ளாகியுள்ளார்.