காத்தான்குடியில் அதிகரிக்கும் கொரனா இன்றும் 06 பேருக்கு மொத்தம் 14.

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் இன்று காலை 15பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் 06பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளானவர்கள் நேற்று  தொற்றுக்குள்ளானவரின் நேரடித்தொடர்புடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 24 மணித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்கனின் எண்ணிக்கை13 ஆக அதிகரித்துள்ளது.

இதில் காத்தான்குடியில் 08பேரும் கல்லாற்றில் 05பேரும் இனம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 129பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் அதில் தற்போது 32பேர் சிகிச்சைபெற்று வருவதாகவும்தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று காலை கல்லடி கடற்கரையில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட அன்ரிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லைனெவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பு நகரில் நேற்று சீல் வைக்கப்பட்ட உணவக ஊழியர்களுக்கு தொற்று இல்லையென பரிசோதனைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இருந்தும் உணவகத்தை திறப்பதற்கான அனுமதி வழங்குவது பற்றி ஆராயப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.