திருகோணமலைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.அரசஅதிபர்.

(ஹஸ்பர் ஏ ஹலீம்,  பொன் ஆனந்தம், கதிரவன்)

திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 6 தினங்களில் 66 கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் தற்போதைய சூழ்நிலையில் அத்தியாவசிய தேவை தவிர ஏனைய தேவை கருதி  பிற மாவட்டங்களில் இருந்து திருகோணமலை மாவட்டத்திற்கு வருபவர்கள் தமது பயணங்களில் இருந்து தவிர்த்து கொள்ளுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

 நேற்று (23)கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் தலைமையில் நடைபெற்ற விசேட கொவிட் கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானித்தற்கமைவாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் மாவட்ட மக்கள் இச்சந்தர்ப்பத்தில் சுகாதார நடைமுறைகளை கட்டாயம் கடைப்பிடிப்பதுடன் ஒன்று கூடல் உட்பட அநாவசிய பயணங்களில் இருந்து தவிர்ந்து வைரசை கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறும் அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.