மண்முனை தென்மேற்கில் பிரதேச கலை இலக்கிய விழா

மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக கலை இலக்கிய விழா இன்று (21) பிரதேச செயலக ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

தற்போதைய கொரனா தொற்று காலத்தினை கருத்தில் கொண்டு கலாசார அலுவல்கள் திணைக்களமும், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய இந்நிகழ்வு பிரதேச மட்ட இலக்கிய போட்டியில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசில்கள் வழங்குதலுடன், கலைஞர்கள், எழுத்தாளர்கள் கௌரவிப்பும் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர், கணக்காளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், நிருவாக உத்தியோகத்தர் மற்றும் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.