தொடர் மழையால் கிழக்கில் வெள்ளக்காடு 401.6மில்லி மீற்றர் மழை மட்டில் பதிவு. ஜனாதிபதி வீதியும் வெள்ளத்தில்.

ரீ.எல்.ஜவ்பர்கான்–

கிழக்கு மாகாணத்தில் கடந்த 3 நாட்களாக தொடர்ச்சியாக பெய்துவரும் பலத்த மழை காரணமாக மட்டக்களப்பு  மாவட்டத்தின் பல பிரதேசங்களில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் தாழ்நிலப் பிரதேசங்களில் உள்ள பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள்இ தமது வீடுகளை விட்டு வெளியேறிஇ உறவினர் வீடுகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். கொரோனா வைரஸ் அச்சம் நிலவி வரும் இக்காலகட்டத்தில் மக்கள் மிகப்பெரும் அசௌகரியத்தை தற்போது எதிர்நோக்கி வருகின்றனர்.

இதன்படிஇ மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று (23) காலை 8.30 மணி வரையான 72 மணித்தியாலங்களில் 401.6மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையப் பொறுப்பதிகாரி சுப்பிரமணியம் ரமேஸ் தெரிவித்தார்.

புதிய காத்தான்குடிஇ நாவற்குடாஇ ஆரையம்பதிஇ வெல்லாவெளிஇ கொக்கட்டிச்சோலைஇ கிரான் வாழைச்சேனை வவுணதீவ உட்பட  மாலட்டத்தின் 14 பிரதேச செயலகப்பிரிவுகளிலும்    வெள்ளம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாகஇ புதிய காத்தான்குடி பிரதேசத்திலுள்ள பல வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன்இ களுதாவளைஇ களுவாஞ்சிகுடிஇ மகிளுர்இ குருமண்வெளிஇ கிராங்குளம்இ எருவில்இ வெல்லாவெளிஇ கோவில்போரதீவுஇ பெரியபோரீவுஇ வெல்லாவெளிஇ பழுகாமம் உள்ளிட்ட பல இடங்களிலுள்ள சிறிய குளங்கள் நீர் நிரம்பியுள்ளன. அதேவேளைஇ மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதான பெரிய குளங்களின் நீர் மட்டங்களும் உயர்ந்துள்ளதுடன்இ சில குளங்களின் வான்கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளதாகஇ நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

அத்துடன்இ வீதிகளில் வெள்ளம் தேங்கி நிற்பதுடன்இ பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவல் அபாய சூழ்நிலைக்கு மத்தியில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கல்முனைப் பிராந்தியத்தில் கடற்றொழில்இ விவசாயம் மற்றும் வியாபார நடவடிக்கைகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன்இ உணவுப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன்இ விலைகளும் அதிகரித்துக் காணப்படுகின்றன. இதனால் பொதுமக்கள் பெரும் திண்டாட்டத்தை எதிர்நோக்கி வருகின்றனர்.