(சர்ஜுன் லாபீர்)
கலாச்சார அலுவல்கள் திணைக்களம்,கல்முனை பிரதேச செயலகம் மற்றும் கலாச்சார அதிகார சபையும் இணைந்து நடாத்தும் பிரதேச செயலக கலை விழாவும்,முனை இலக்கிய மலர் வெளியீட்டு விழாவும் இன்று(23) கலாச்சார அதிகார சபையின் பொருளாளரும்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளருமான ஏ.ஆர் சாலீஹ் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக பிரதேச செயலக கணக்காளர் வை. ஹபிபுல்லா,மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர்,நிர்வாக உத்தியோகத்தர்.எம்.என்.எம் ரம்சான்.பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்,கலாச்சார அதிகார சபையின் செயலாளர் எஸ்.எல்.ஏ அஸீஸ்,கலாச்சார அதிகார சபையின் உப செயலாளர் பசீர் அப்துல் கையும் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
கல்முனை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கலை,கலாச்சார மற்றும் இலக்கிய துறைகளில் முதலாம் இடம் பெற்ற மாணவர்களுக்கும் மற்றும் கலைஞர்களுக்கும் பரிசில்களும், கெளரவிப்புக்களும் இடம்பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்