மட்க்களப்பில் குறிதவறிய துப்பாக்கி தாதிபடுகாயம் எந்திரி கைது.

 க.சரவணன்
மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3 ம் குறுக்கு வீதியில் எந்திரி ஒருவர்   தாதியரின்மரத்தில் இருந்த வவ்வாள் மீது  எயார்கண் துப்பாக்கியால் சுட்டதில் குறிதவறி எதிர் வீட்டின் தாதியர்; உத்தியோகத்தர் ஒருவர் மீது குண்டுபட்டதில் அவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் நேற்று  செவ்வாய்க்கிழமை (22) இரவு இடம்பெற்றுள்ளதுடன் எந்திரியை கைது செய்ததுடன் துப்பாகியை மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இதில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் 55 வயதுடைய நடராசா ராதா என்பவரே இவ்வாறு படுகாயமடைந்துள்ளார்.
குறித்த வீதியில் வசிக்கும் கொழும்பில் அரச திணைக்களத்தில் கடமையாற்றும் எந்திரி சம்பவதினமான நேற்று (22) இரவு 9.30 மணியளவில் வீட்டின் முன்பகுதில் இருந்த மாமரத்தில் வவ்வாள் மீது எந்திரி தனது எயார்கண் துப்பாகியை எடுத்துக் கொண்டு வீட்டின் மேல்மாடியில் இருந்து துப்பாக்கி சூடுநடாத்தியுள்ளார்.
இதன் போது சத்தம் கேட்டு எதிர் வீட்டின் தாதியர் சத்தம்கேட்டு வெளியில் வந்தபோது அவர் மீது வவ்வாளுக்கு சுட்ட துப்பாகி சூடு குறிதவறி தாதியர் மீது குண்டு பாய்ந்ததில் அவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிசாரின் ஆரம்பவிசாரணையில் தெரியவந்துள்ளது
இதனையடுத்து துப்பாக்கி சூடுநடாத்திய எந்திரியை கைது செய்ததுடன் துப்பாக்கியை மீட்டுள்ளதாக  பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி பி.கே. ஹோட்டியாராச்சி தலைமையில் பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப் இன்பெக்ஸ்டர்  எம்.முகமட்  மற்றும் தடயவியல் பிரிவுகள் மேற்கொண்டுவருகின்றனா்