திருமலை நகரின் பள்ளிவாசல்களில் மறு அறிவித்தல் வரை தொழுகைகள் இல்லை.

 கதிரவன்

திருகோணமலை நகரின் அனைத்து பள்ளிவால்களையும் மறு அறிவித்தல்வரை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக அகில இலங்கை  ஜம்இய்யத்துல் உலமா  சகலபள்ளிவாசல்களுக்கும் அறிவித்துள்ளது.

      அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா  திருகோணமலை நகர கிளையினர் மற்றும்  அனைத்துபள்ளிவாசல்கள் சம்மேளனமும் இணைந்து எடுக்கப்பட்டதீர்மானத்திற்கு அமைவாக மாகாண சுகாதார பணிமனையின் ஆலோசனைக்கு இணங்க நேற்று முதல் மறு அறிவித்தல்வரை  பள்ளிவாசல்களில் நடைபெறும் தொழுகைகள்  எதுவும் நடைபெறமாட்டாது என அறிவித்துள்ளனர்.