கழிவறை ஜன்னல் ஊடாக தப்பிச்சென்ற கொரனா நோயாளி.

நாகோடா பொது வைத்தியசாலையில்  சிகிச்சைபெற்று வந்த கொரனா தொற்றாளர் ஒருவர் நேற்று (20) காலை கழிப்பறை ஜன்னல் ஊடாக தப்பிச் சென்றுள்ளதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் தமரா கலுபோவில  தெரிவித்தார்..

53 வயதான ஒருவர் மருத்துவமனையில் இருந்து தப்பியுள்ளார். காலை 6.10 மணியளவில் தான் கழிப்பறைக்குச் செல்வதாக அருகிலுள்ள படுக்கையில் இருந்த ஒருவரிடம் கூறிவிட்டு அவர்  சென்றிருந்தார். .

கொரோனாவின் சந்தேகத்திற்கிடமான அறிகுறிகளுடன் அவர் 18 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு விரைவான ஆன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இன்னும் அறிக்கை கிடைக்கவில்லை என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.