சமஸ்டியை ஒத்த தீர்வினை உள்ளடக்கிய வரைபையே தமிழ் தேசிய கூட்டமைப்பு வழங்கும். பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்

(படுவான் பாலகன்)

தமிழ் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கிய சமஸ்டியை ஒத்த தீர்வினை உள்ளடக்கிய வரைபையே தமிழ் தேசிய கூட்டமைப்புக வழங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்  தலைமையில்சனிக்கிழமை நடைபெற்றது.  இக்கூட்டம் குறித்து கேட்டபோதே பாராளுமன்ற உறுப்பினர் இதனை தெரிவித்தார்.

புதிய அரசமைப்புக்கான முன்மொழிவு ஆவணத்தில் இனப்பிரச்சினையின் தோற்றம்அரசமைப்புக்களில் ஏற்பட்ட குறைபாடுகள்,  முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிகா ,பிறேமதாச, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் வாக்குறுதிகள் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய வாக்குறுதிகள்அரசமைப்பின் 13ஆவது திருத்தம்அதுகுறித்த மஹிந்த அரசின் வாக்குறுதிகள்வெளிநாட்டுத் தலைவர்களுக்குவழங்கப்பட்ட வாக்குறுதிகள்தமிழர்களின் அபிலாஷைகள் போன்றவற்றை ஒவ்வொருதலைப்புக்களில் வழங்கக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது என்றார்.

இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனின் தலைமையில்தயாரிக்கப்பட்டு வரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்மொழிவுகளைஇம்மாதம் இறுதிக்குள் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்பங்காளிக்கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி)செல்வம் அடைக்கலநாதன் (ரெலோ)தர்மலிங்கம் சித்தார்த்தன் (புளொட்) மற்றும்கூட்டமைப்பின் பேச்சாளரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன்ஆகியோர் கூட்டாகச் சென்று சமர்ப்பிப்பது என இந்தக் கூட்டத்தில் முடிவுஎடுக்கப்பட்டுள்ளது.

எனினும்முன்மொழிவு ஆவணத்தைப் பகிரங்கப்படுத்துவது இல்லை எனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தென்னிலங்கையில் உள்ள அரசியல்வாதிகள் அதை ஆளாளுக்கு அரசியல் செய்வார்கள் என்ற காரணத்தைக் கொண்டே மேற்படி முடிவு எடுக்கப்பட்டுள்ளது.