எஸ்.சபேசன்
மட்டக்களப்பு வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டூர் சங்கர் புரத்தில் உள்ள கண்ணகியம்மன் ஆலய வளாகத்தில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக அதனைத்தேடும் நடவடிக்கையில் நேற்று (18) பொலிஸார் ஈடுபட்டுள்னர்.
கடந்த யுத்த காலப்பகுதியில் இந்த ஆலய வளாகத்தில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதாக பொலிஸருக்கு கிடைக்கப்பெற்ற தகவலினை தொடர்ந்து மத்திய முகாம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.ஏ.விஜயசிறி,வெல்லாவெளி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி நந்தசிறி,விசேட அதிரடிப்படை பொறுப்பதிகாரி டவுளியு.ஏ.ஜீ.கீர்த்திரத்ன அவர்களின் தலைமையில் தொல் பொருள் திணைக்களத்தினர் பிரதேச செயலக உத்தியோகத்தினர் இந்த ஆயுதங்களை வக்கோ,ஜே.சி.பீ வாகனத்தினை கொண்டு தேடும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.