மாகாணசபை தேர்தல் இடம்பெற்றால் அதனை எதிர்கொள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு எப்போதும் தயார்.

பா.அரியநேத்திரன் மு.பா.உ.

மாகாணசபை தேர்தல் நடைபெறுமானால் அதற்கு முகம் கொடுத்து வெற்றிபெற வடக்கு கிழக்கு மகாணங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தயாராக உள்ளது என மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் பட்டிருப்பு தொகுதி இலங்கை்தமிழரசு கட்சி தலைவருமான பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

மாகாணசபை தேர்தல் எதிர்வரும் 2021 மார்ச் மாதம் இடம்பெறும் என அமைச்சரவை பேச்சாளர் கெகலிய்ரம்புகல ஊடகங்களுக்கு வழங்கிய செய்தி்தொடர்பாக மேலும் கூறுகையில்.

மாகாணசபைத்தேர்தல் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக கடந்த 1987,ல் 13,வது திருத்த சட்டம் ஊடாக இலங்கையில் கொண்டுவரப்பட்ட அதிகாரப்பயிர்வு நடைமுறையாகும்.

இந்த மாகாணசபை ஆட்சி மூலம் வடக்கு கிழக்கு மக்களுக்கான பூரண அதிகாரப்பகிர்வு இல்லை என்பது உண்மை ஆனால் ஈழவிடுதலைப்போராட்டம் ஆயுத ரீதியாக ஆரம்பமான காலத்தில் இந்திய அரசின் தலையீட்டால் ஒரு சர்வதேச உடன்படிக்கை யாக இலங்கை இந்திய ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த வரலாற்று உடன்படிக்கை என்பது ஈழத்தமிழர்களின் அடிப்படை உரிமைகள் இலங்கை அரசு மறுக்கப்பட்டிருந்தது என்ற உண்மையும் அதனால் இந்திய அரசின் தலையீடு காரணமாக மாகாண நிர்வாக ஆட்சிமுறை ஒன்று இணைந்த வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு தேவை என்பதும் அதனூடாக ஓரளவு அதிகாரப்பகிர்வு செயல்வடிவில் இல்லை என்றாலும் எழுத்துவடிவில் ஒரு ஆவணமாக உள்ளது என்ற வரலாறு மாகாணசபை சட்டமூலம் உறுதி செய்தது.இது இறுதி தீர்வாக இல்லாவிட்டாலும் வடக்கு கிழக்கு மக்களுக்கான அரசியல் தீர்வு அவசியம் என்பதை சர்வதேசத்திற்கு உணர்த்திய ஒரு வரலாற்று ஆவண நடைமுறையாகும்.

இலங்கை இந்திய் ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்டபோது 1988 காலப்பகுதியில் ஈழவிடுதலை போராட்டம் ஆயுத்ரீதிநில் கூர்மை்பெற்ற காலமாகும் அதனால் இலங்கை இந்திய ஒப்பந்தம் ஊடாக எதிர்பார்த்த அரசியல் தீர்வு கிடைக்கவில்லை என்பதற்காக முதலாவது வடக்கு கிழக்கு இணைந்த்மாகாணசபை்தேர்தலை அன்றைய காலத்தில் ஆயுத ரீதியிலான போராட்டத்தை முன்எடுத்த தமிழீழ விடுதலைப்புலிகளும் ரெலோ இயக்கமும் ஜனநாயக அரசியல் கட்சியாக்இருந்த தமிழர் விடுதலை கூட்டணியும் புறக்கணித்தது் ஈபீஆர்எல்எவ் இந்திய அமைதிப்படையின் உதவியுடன் தேர்தலில் வெற்றிபெற்று வரதராஜப்பெருமாள் முதலமைச்சரானார்.

அந்த வடகிழக்கு இணைந்த மாகாண சபையும் 1990ல் போதிய அதிகாரங்கள் இல்லை என முதலமைச்சராக இருந்த வரதராஜப்பெருமாள் தமிழிழத்தை பிரகடணம் செய்து விட்டு இந்திய அமைதிப்படையுடன் நாட்டை விட்டு ஓடினார் இதனால் மாகாணசபை இயங்கவில்லை இது வரலாறு.

அதன் பின்பு 2006,ல் மக்கள் விடுதலை முன்னணி நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து இணைந்த வடகிழக்கு மாகாணம் இரண்டு மாகாணசபை யாக மாற்றப்பட்டது.

அதனால் 2008,முதலாவது கிழக்கு மாகாணசபை தேர்தல் இடம்பெற்றது அந்த தேர்தல் இடம்பெற்ற காலம் கிழக்கில் பல் கொலை அச்சுறுத்தல்களும் கடத்தல்களும் உயிர் ஆபத்துக்களும் நிலவிய காலம் அப்போது 22, தமிழ்தேசிய்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களும் சொந்த மாவட்டங்களுக்கு செல்ல முடியாமல் கொழும்பில் முடக்கப்பட்டனர் மட்டக்களப்பு மாவட்ட் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த நான் (பா.அழியநேத்திரன்) உட்பட கனகசபை, தங்கேஷ்வரி,ஜெயானந்தமூர்த்தி ஆகியோரின் உறவினர்கள் தமிழ் ஆயுத ஒட்டுக்குழு கடத்திய காலம் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த மாமனிதர் ஜோசப்ஐயா ரவிராஜ் சிவதேசன் மற்றும் மகேஷ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் சந்திரநேரு உட்பட் ்ஊடகவியலாளர்களான நடேசன் சிவராம் என் பலரை்கொலைசெய்த காலம் தமிழர் புனர்வாழ்வுக்கழக உறுப்பினர்களான பிறேமினி உட்பட ஏழுபேரை வெலிகந்தயில் பிள்ளையான் குழு கடத்தி கொரை செய்த காலம் கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் ரவீந்தநாத்தை கொழும்பில்வைத்து் கடத்தப்பட்ட காலம் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் ஆயுத ஒட்டுக்குழுவின் கோரத்தாண்டவம் ஆடிய காலம் அதனால் 2008 கிழக்கு மாகாணசபை தேர்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு போட்டியிடவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபை தேர்தலில் போட்டியிடக்கூடாது என்பதற்காகவே இவ்வாறு பல அச்சுறுத்தல்களை தமிழ் ஆயித ஒட்டுக்குழுவை கொண்டு அரங்கேற்றிய அந்த வரலாறு 2005, தொடக்கம் 2009,வரை , இருந்தது அதனால் கிழக்கு மாகாணசபை தேர்தலில் நாம் முகம் கொடுக்கவில்லை இதுதான் உண்மை.

அதன் பின்பு 2012,ல் கிழக்குமாகாணசபை தேர்தலிலும், 2013, வடமாண சபை தேர்தலிலும் நாம் போட்டியிட்டோம். வடமாகாணசபை முழுமையான பலம் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்தது கிழக்கு மாகாணசபை தமிழ்பிரதிநித்துவம் எமக்கு உறுதி செய்யப்பட்டது.

கடந்த ஐந்து வருடங்களாக மாகாணசபை ஆளுநர்களின் அதிகாரத்தில் உள்ளது தற்போது மீண்டும் ஒரு மாகாணசபை தேர்தல் எந்த முறையில் இடம்பெற்றாலும் அதை எதிர் கொளள தமிழ்தேசிய கூட்டமைப்பு எந்த நேரத்திலும் தயாராக உள்ளது அதற்கான சகல முயற்சிகளையும் நாம் எடுப்போம் வெற்றிபெறுவோம் எனவும் மேலும் கூறினார்.