(யாக்கூப் பஹாத்)
அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் கொவிட்19 வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதையடுத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் ‘சுவதரணி’ ஆயுர்வேத மருந்து பக்கட்டுக்களை விநியோகிக்கும் பணி இன்று நிந்தவூர் ரீ மா பிஸ்கட் நிறுவனத்தில் இடம்பெற்றது.
சுதேசிய வைத்திய மேம்பாட்டு கிராமிய மற்றும் ஆயர்வேத வைத்தியசாலை அபிவிருத்தி, சமுதாய சுகாதார அமைச்சினால் அறிமுகப் படுத்தப்படும் ‘சுவதரணி’ ஆயுர்வேத மருந்து பக்கட்டுக்களை ரீ மா பிஸ்கட் உற்பத்தி நிறுவனத்தின் பணிப்பாளர் எம்.சி.எம்.சுபைர் அவர்களின் அழைப்பின் பேரில் நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி (தொற்றா நோய்) வைத்தியசாலைப் பணிப்பாளர் டொக்டர் கே.எல்.எம்.நக்பர் அவர்கள் வருகை தந்து அதன் ஊழியர்களுக்கு வழங்கி வைத்தார்.