மன்னார் முர்லைத்தீவு வைத்தியர் தாதிகளின் பிரச்சனைகள் விரைவில் தீர்த்துவைக்கப்படும் வட மாகாண ஆளுநர் திருமதி சாள்ஸ்.

( வாஸ் கூஞ்ஞ)

மன்னார் மாவட்டத்தில் நிலவிவரும் வைத்தியர் மற்றும் தாதியரின் பற்றாக்குறைகள் விரைவில் நீக்கப்படுவதற்கான நிலைமை இருப்பதால் இவைகள் இங்கு நிவர்த்தி செய்யப்படும் என வட மாகாண ஆளுநர் திருமதி பி.எம்.சாள்ஸ் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தின் அபிவிருத்திக் குழுக் கூட்டம் மன்னார் மாவட்ட அபிருத்திக் குழுக் கூட்டத்தின் இணைத் தலைவரான காதர் மஸ்தான் தலைமையில் மன்னார் மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் வட மாகாண ஆளுநர் திருமதி பி.எம். சாள்ஸ், வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் சாள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம், திலீபன் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டிமெல் உட்பட மாகாண திணைக்களங்கள் மற்றும் உள்ளுர் திணைக்கள உயர் அதிகாரிகரிகள் சங்கங்களின் முக்கியஸ்தர்களும் இவ் அமர்வில் கலந்து கொண்டனர்.

இங்கு வட மாகாண ஆளுநர் திருமதி பி.எம். சாள்ஸ் தொடர்ந்து தெரிவிக்கையில்

இரண்டு முறை கிடைக்கின்ற நியமனங்களில் வட மாகாணத்துக்கு தேவையான வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்படும் என எமக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்குள்ள வைத்திய அதிகாரிகளின் பற்றாக்குறை நீங்க வாய்ப்பு ஏற்படும் நிலை காணப்படுகின்றது.

அத்துடன் தாதியர்; பற்றாக்குறைகளையும் நீக்க நாங்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மேலும் மன்னார் முல்லைத்தீவு ஆகிய இரண்டு வைத்திசாலைகளுக்கான வைத்தியசாரல கட்டடிடங்களுக்கான அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு ஊடாக இந்திய உயர் ஸ்தானிகர் மூலம் இந்திய அரசின் உதவியுடன் மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் இதுவிடயமாக நாங்கள் சுகாதார அமைச்சருடனும் பேச்சுவார்த்தைகள் மேற்கொண்டு வரகின்றோம். ஆகவே இவ்விரு மாவட்டங்களின் வைத்தியசாலைகளுக்கும் விரைவில் அபிவிருத்தி உதவிகள் கிடைக்கப்பெற இருக்கின்றன.

இந்த மன்னார் மாவட்டத்துக்கு மாகாண  நிர்வாகத்தின் கீழ் உள்ள ஏனைய தேவைகளையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருவதுடன் அவைகள் சம்பந்தமாகவும் ஆராய்ந்து வருகின்றோம்.

அத்துடன் மாகாண நிர்வாகத்துக்கு உட்பட்ட நீர்பாசனத் திட்டங்கள் யாவும் எங்களின் குழு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு இங்கு சமர்பிக்கப்படும் அறிக்கைகளையும் நாங்கள் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இவ் மாவட்டத்துக்கு வேண்டிய தேவைகளை முன்னெடுத்துச் செல்லப்படும் என்றார்.(60)