பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் களவிஜயம்
(வவுணதீவு எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய பிரதேச மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் முகமாக தற்போது அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் சந்திவெளி – திகிலிவட்டை மக்களின் கடந்த பல வருட முக்கிய தேவையாகவிருந்த பாலம் நிர்மாணிக்கும் செயற்றிட்டத்தின் ஆரம்பக்கட்ட பணிகளை முன்னெடுப்பது சம்பந்தமாக களவிஜயம் வியாழகிழமை (17) பிற்பகல் இடம் பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டப் நாடாளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக் குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் அப்பகுதிக்கு விஜயம் செய்து அங்கு தற்போதைய மக்களின் நிலைப்பாடு சம்பந்தமாகவும் எடுக்கவேண்டிய முன்னாயத்த பணிகள் சம்பந்தமாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாகாணப் பணிப்பாளர் திருமதி கலைவாணி வன்னியசிங்கம் அவர்களுடன் கலந்துரையாடினார்.
கடந்த பல வருடங்களாக ஆட்சி செய்த அரசாங்கங்களிடம் இப்பகுதி மக்கள் பலதடவை கோரிக்கை விடுத்தும் இப்பாலம் நிர்மாணிக்கும் பணி நிறைவேற்றப்படாமல் இருந்து வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது