யூ.கே. காலித்தீன்
கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தில் கடந்த 12 மணித்தியாலத்தில் புதிதாக 19 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய அக்கரைப்பற்று சந்தை கொத்தணியில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 460 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கிழக்கு மாகாணத்தில் கடந்த 24 மணித்தியாலத்தில் அக்கரைப்பற்று பகுதியில் 8 பேரும், அட்டாளைச்சேனை பகுதியில் 4 பேரும், பொத்துவில் பகுதியில் 5 பேரும், நாவிதன்வெளி பகுதியில் ஒருவரும் , கல்முனை தெற்கு பகுதியில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், கிழக்கு மாகாணத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 637 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கிழக்கு மாகாணத்தில் இதுவரையான காலப்பகுதியில் கல்முனை சுகாதார பிராந்தியத்தில் 501பேரும், அம்பாறை சுகாதார பிராந்தியத்தில் 20 பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 98 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் 18 பேரும் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதேவேளை, கொரோனா அச்சம் காரணமாக அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய 3 பிரதேச செயலகப்பிரிவுகளும், தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.