சர்ஜுன் லாபீர்)
கல்முனை பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கொரோனா தொற்றாளருடன் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் தற்போது மேற்கொள்ளப்பட்ட அண்டிஜண்ட்(RAT) பரிசோதனை முடிவுகள் அனைத்தும் நெகடிவாக அமையப்பெற்றுள்ளது.
எனவே எந்தவொரு உத்தியோகத்தர்களும், பொதுமக்களும் அச்சப்படத் தேவையில்லை எனவும், நாளைமுதல் காரியாலய செயற்பாடுகள் அனைத்தும் வழமைபோன்று நடைபெறும் என்பதனையும் அறியத்தருகின்றோம் என கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீர் குறிப்பிட்டார்.