மட்டு இளைஞன் திருமலையில் பரிதாபச்சாவு.

யானைக்கு வைத்த மின்சாரவேலியில் இளைஞர் சிக்கி பரிதாபகரமாக மரணமான சம்பவம் திருகோணமலை பன்குளம் பகுதியில் நேற்று நள்ளிரவு  11.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மொறவேவ பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் மட்டக்களப்பு காந்திநகர் பகுதியைச்சார்ந்த  பரந்தாமன் கிருசாந்தன்(21)  எனவும் விசாரணை யின்போதுதெரவந்துள்ளதாக பொலிசார்மேலும் தெரிவித்துள்ளனர். பன்குளம் 6ம்வாய்கால் பகுதியில்  இறந்தவரின் சிறியதாயின் வீட்டிற்கு வேலைக்காக வந்திருந்ததாகவும்  இதன்போதே இவர் மின்சார வேலியில் அகப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசாரணைகளின் பின்னர் இறந்தவரின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிசார் மேற்கொண்டுள்ளனர்