இஞ்ச பாருங்கோ மயிலத்தமடுவ

இஞ்ச பாருங்கோ நேற்று நம்மட பாராளுமன்ற உறுப்பினர்களும் இன்னும் சில பிரதிநிதிகளும் மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்திற்கு விஜயம் செய்து அங்கு நம்மட பண்ணையாளர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் பற்றி நேரடியாக பார்த்துள்ளார்கள் அதன்பிறகு வழக்குத்தான் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார்கள்.

அந்த நேரத்தில் அங்கு அத்துமீறி பயிர் செய்துள்ள சிங்கள மக்களையும் சந்தித்துள்ளார்கள் அந்த மக்கள் என்ன கேட்டார்கள் தெரியுமா? 25கிலோமீற்றருக்கு அப்பாலிருந்து வந்து மாடு மேய்க்க உங்களுக்கு முடியுமென்றால் ஏன்  இரண்டு கிலோமீற்றருக்கு பக்கத்தில் உள்ள எங்களுக்கு பயிர் செய்ய முடியாது என. இது திடிர் என வந்த கேள்வி இல்லை யாரோ கேட்கச்சொல்லியுள்ளார்கள். மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் கீழ்  மயிலத்தமடுவ என்கின்ற கிராமம் உருவாகினாலும் சந்தேகம் இல்லை பாருங்கோ.