சமுர்த்தி முத்திரைக்கான மீளாய்வுப் பணி

ஹஸ்பர் ஏ ஹலீம்_
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவின் சமுர்த்தி வங்கி கிளையினால் சமுர்த்தி மீளாய்வு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.
குறித்த மீளாய்வானது இன்றை (10)தினம் சிராஜ் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவில் மூன்றாவது நாட்களாக தம்பலகாம பிரதேச  சமுர்த்தி வங்கி முகாமையாளர் திருமதி முஸம்மிலா ராபிக் தலைமையில் இடம் பெற்று வருகின்றது.
சமுர்த்தி பெறும் குடும்பங்களின் சமுர்த்தி முத்திரை கொடுப்பனவு ஆவணங்கள் தீவிர மீளாய்வுப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.
இதில் சிராஜ் நகர் கிராம உத்தியோகத்தர் பிரிவின் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் றபீக், அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.ரீ.பாயிஸ்,கிராம அதிகாரி அன்சார் முனாஸ்,பட்டதாரி பயிலுனர்கள் ஆகியோர்களும் கலந்து கொண்டனர்.