மூதூர் ஆர்.டி.எஸ். முதலாவது ஒழுங்கை வீதி ‘சபரிகம’ கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைப்பு.

(எப்.முபாரக்)

மூதூர் கிழக்கு அக்கரைச்சேனை கிராம சேவகர் பகுதியில் பல்வேறு கிராமங்களையும் இணைக்கும் பிரதான ஆர்.டி.எஸ். முதலாவது ஒழுங்கை வீதி ‘சபரிகம’ கிராம அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டு வருகிறது. இதனை மூதூர் அக்கரைச்சேனை கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தலைவர் எம்.ஐ. சவாகிர் தெரிவித்தார்.

பல வருட காலமாக புனரமைப்பின்றி காணப்பட்ட இவ்வீதியையும் இக்கிராமத்தில் சூழவுள்ள பல கிராமங்களையும் உள்ளடக்கியதாக வாழும் மக்கள் இவ்வீதியை புனரமைத்து அன்றாட போக்குவரத்திற்கான வசதியினை ஏற்படுத்துமாறு விடுத்த வேண்டுதலின் பேரில் அரசின் நிதி ஒதுக்கீட்டில் ‘கொங்கிறீட்’ வீதியாக இவ்வீதியின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருவதுடன் தேவையான வடிகான் புனரமைப்பு பணிகளும் இடம்பெற்று வருகின்றன.