தரப்படுத்தலில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு முதலாமிடம்

(றாசிக் நபாயிஸ்,மருதமுனை நிருபர்)
தென்கிழக்கு பல்கலைக்கழகம் இலங்கை பல்கலைக்கழகங்களில்
UI Greenmetric Ranking 2020 இன் தரப்படுத்தலில் முதலாம் இடத்தைப் பெற்றுள்ளது.
இந்த தரப்படுத்தலில் பங்குபற்றிய 922 பல்கலைக்கழகங்களில் உலகளாவிய ரீதியில் 331 ஆம் இடத்தையும் இலங்கையில் முதலாம் இடத்தையும் தென்கிழக்கு பல்கலைக்கழகம் பெற்றுகொண்டமை குறிப்பிடத்தக்க சாதனையாகும்.
இலங்கையில் உள்ள ஆறு பல்கலைக்கழகங்கள் இந்த தரப்படுத்தலில் பங்குபற்றியபோதும், இப்பல்கலைக்கழகம் 5,975 புள்ளிகளைப் பெற்று இந்த இடத்தைப் பெற்றிருப்பதோடு
“Silver Ranking” எனும் தரத்தையும் அடைந்திருக்கிறது.