ஒட்டுசுட்டானில்  வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை  தொடர்பான பிரதேச மட்ட கலந்துரையாடல்

(சண்முகம் தவசீலன்)

முல்லைத்தீவில் அண்மைய நாட்களாக மழை பொழிந்துவரும் நிலையில் பல்வேறு பாதிப்புக்களும் ஏற்பட்டிருந்தது

இந்நிலையில்  வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை தொடர்பான பிரதேச மட்ட முன்னாயத்த கலந்துரையாடல்   ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று (09) இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு உதவிப்பணிப்பாளர் இ.இலிங்கேஸ்வரகுமார் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன்  ஒட்டுசுட்டான் பிரதேச உதவிப் பிரதேச  செயலாளர் இ.றமேஷ் திணைக்கள உத்தியோகத்தர்கள் கிராம அலுவலர்கள் கிராம மட்ட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பொலிஸார்  இராணுவத்தினர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்

குறித்த கலந்துரையாடலில் வடகிழக்கு பருவப்பெயர்ச்சி மழை தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய  முன்னாயத்த நடவடிக்கைகள் மற்றும் அனர்த்தம் நிகழும் போது அதனை எதிர்கொள்ளல் உள்ளிட்ட  விடயங்களை மேற்கொள்ளும்  அனர்த்த முகாமைத்துவத்துடன் தொடர்புடைய பங்குதாரர்களுடனான கலந்துரையாடலாக இது அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது