மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்வியுடன் கூடிய அபிவிருத்தியே அவசியம்!

(எஸ்.எஸ்.அமிர்தகழியான்) மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்ட கல்வி அபிவிருத்திகுழுக்கூட்டம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அபிவிருத்திக்குழு இனைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில், அரசாங்க அதிபர் க.கருணாகரனின் ஏற்பாட்டில்  நேற்று(9) மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு மத்தியிலும் மாவட்டத்தின் கல்வியில் அபிவிருத்தியினை ஏற்படுத்தவேண்டும் எனும் தனது உயரிய நோக்கதினை நடைமுறைப்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையாக மாவட்டத்தில் உள்ள வலய கல்வி பணிப்பாளர்கள் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜீ.முத்துவன்டா மற்றும் மாகாண கல்வி திணைக்களத்தின் பணிப்பாளர் எம்.ரி.ஏ.நிசாம் ஆகியோர்கலந்து கொண்டனர்.

குறிப்பாக பின்தங்கிய பாடசாலைகளில் காணப்படுகின்ற குறைபாடுகளை அடையாளம் கண்டு அபிவிருத்தி மேற்கொள்வதற்கு கல்வி அமைச்சரின் உதவிகள் பெறவுள்ளதாகவும் குறிப்பாக மின்சார இணைப்பற்ற பாடசாலைகள், ஓலைகொட்டகை பாடசாலைகள், குடி நீர், மலசல கூடங்கள், போக்குவரத்து, வகுப்பறை தளபாடங்கள் அற்ற பாடசாலைகளை அடையாளம் கண்டு உடனடியாக அபிவிருத்தி செய்யவுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சி.சந்திரகாந்தன் குறிப்பிட்டார்.

கல்வி நடவடிக்கையில் கரிசனை காட்டுகின்ற ஒரு பாராளுமன்ற உறுப்பினராகவும் முன்னால் முதல் அமைச்சராக இருந்த காலத்தில் கிழக்கு மாகாணத்தில் கல்வியில் பாரிய மறுமலர்ச்சியை ஏற்ப்படுத்தி அக்காலத்தினை பொற்காலமாக மற்றிய பெருமையும் இவருக்கு உண்டு என மாகாண பணிப்பாளரின் உரையில் குறிப்பிட்டமை அங்கு கலந்து கொண்ட அனைவரிம் கவனத்தினையும் ஈர்த்திருந்தது.

ஆசிரியர்களின் பற்றாக்குறை தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் அது தொடர்பாக சமப்படுத்தல் இடமாற்றத்தினை செய்வதும் அதிகஸ்ட பிரதேச பாடசாலைகளுக்கு தேவையான ஆசிரியர்களை வழங்கவும் ஆலோசிக்கப்பட்டது.