துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மட்டு. மாநகர சபையினால் பல வீதிகள் செப்பனிடப்படுகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபையின் துரித வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ் கருவேப்பங்கேணி விபுலானந்தா வித்தியாலய 1ஆம் குறுக்கு மற்றும் கல்லடி புது முகத்துவாரம் 8ஆம் குறுக்கு உள்ளிட்ட வீதிகளை செப்பனிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மட்டக்களப்பு மாநகர சபையின் 2020 ஆம் ஆண்டுக்கான பாதீட்டு நிதி ஒதுக்கீட்டின் ஊடாக கருவேப்பங்கேணி வட்டார உறுப்பினர் வே.தவராஜாவின் வேண்டுகோளுக்கிணங்க விபுலானந்தா பாடசாலை 1ஆம் குறுக்கு வீதியினை புனரமைக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

அத்துடன் கல்லடி புது முகத்துவார வட்டார  உறுப்பினர் சீ.ஜெயந்திரகுமாரின் வேண்டுகோளுக்கிணங்க திருச்செந்தூர் 4ஆம், 5ஆம் குறுக்கு வீதிகள்  மற்றும் கல்லடி புது முகத்துவாரம் 8ஆம் குறுக்கு வீதி என்பவற்றை செப்பனிடும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

மேற்படி வீதிகளின் அபிவிருத்தி பணிகளை மட்டக்களப்பு  மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், மாநகர சபை உறுப்பினர்களான வே.தவராஜா, த.இராஜேந்திரன், சீ..ஜெயந்திரகுமார்  மற்றும் மாநகர பொறியியலாளர் சித்ரதேவி லிங்கெஷ்வரன் ஆகியோர் நேற்று(08) பார்வையிட்டனர்.