திருக்கோவில் பொலிசார் இன்று பிரதேசத்தில் நிலையப் பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.ஜெயவீரவின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் காரணமாக மேற்படி 12 நபர்களும் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தி இருந்தனர்.
திருக்கோவில் பிரதேசத்தில் சுகாதார விதிமுறைகளை மீறி முகக்கவசம் அணியாமல் நடமாடிய 15பேருக்கு தலா 2000ஆயிரம் தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்த அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி எம்.ஏ.எம்.ஹம்சா மீண்டும் இவ்வாறு நடந்து கொண்டால் சிறைதண்டனை அனுபவிக்க வேண்டிவரும் எனவும் எச்சரித்தார்.
திருக்கோவில் பிரதேசத்தில் திருக்கோவில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் பொதுச்சுகாதார பரிசோதகர்கள் உத்தியோகத்தர்கள் பொலிசார் இணைந்து இன்று மேற்கொண்ட வீதிப்பரிசோதனை நடவடிக்கையின் போதே குறித்த 15பேரும் முகக்கவசம் அணியாமல் நடமாடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களை இன்று அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டார்.
முகக்கவசம் அணியாமல் நடமாடுவதனால் சமூகத்தொற்று ஏற்பட வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது சுகாதார துறையினர் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
அத்தோடு திருக்கோவில் பிரதேசத்தில் 8பேர் தொற்றாளர்களாக அடையாளப்படுத்தப்பட்ட நிலையில் இத்தொற்றினை கட்டுப்படுத்தும் முகமாக சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றனர்.இதன் ஒரு கட்டமாகவே இன்று சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டதுடன் 15பேரும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.