எப்.முபாரக்
குச்சவெளி பிரதேச சபை மற்றும் இலங்கை ராணுவ படையினர், கடற்படை, பொலிஸ் அதிகாரிகள், அரச ஊழியர்களின் ஏற்பாட்டில் நிலாவெளி தொடக்கம் புல்மோட்டை வரையான பகுதிகளில் இடம்பெறவுள்ள மாபெரும் சிரமதான நிகழ்வு தொடர்பாக திங்கடகிழமை குச்சவெளி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாறக் அவர்களின் தலைமையில் குச்சவெளி பிரதேசத்திற்கான இராணுவத்தினருடன் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.
இச்சிரமதானம் இம் மாதம் 13 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்படவுள்ளது.
குறித்த சிரமதான பணி மேற்கொள்வதற்கான முன்னெடுப்புக்கள் தொடர்பாக இராணுவத்தினருடன் கலந்துரையாடப்பட்டது.
இந்த மாபெரும் சிரமதானப் பணியில் குச்சவெளி பிரதேச சபையின் உறுப்பினர்கள், பொதுமக்கள், இளைஞர்கள் அரசு ஊழியர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு தவிசாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.