மக்களின் தேவைகள் அறிந்தே அரசு சார்பற்ற நிறுவனங்கள் செயல்பட வேண்டும். மன்னார் அரசு அதிபர் 

????????????????????????????????????
( வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் அரசு சார்பற்ற நிறுவனங்கள் முன்னெடுக்கும் அபிவிருத்தி திட்டங்களை மக்களால் இனம் காட்டப்படுகின்றவைக்கே முக்கியத்துவப்படுத்தி அவற்றிற்கு செயல் வடிவம் கொடுக்க வேண்டும் என மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் இவ்வாறு தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கான கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் கடந்த வார இறுதியில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தலைமையில் இடம்பெற்றது.

இவ் கூட்டத்தில் மனனார் மாவட்டத்தில் இயங்கிவரும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன், மன்னார் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் எம்.மகேஸ்வரன் உட்பட பிரதேச செயலாளர்கள் மற்றும் முக்கிய திணைக்கள அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டனர்.

இவ் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டிமெல் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்

அரசு சார்பற்ற நிறுவனங்கள் மன்னார் மாவட்டத்தைப் பொறுத்தமட்டில் நீங்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளீர்கள்.

அரச நிதியுடன் அரசு சார்பற்ற நிதியையும் கொண்டே உரிய காலத்தில் இவ் பகுதியிலுள்ள மக்களை நாம் பராமரிக்கக்கூடியதாக இருந்தது.

நீண்டகாலமக பல அதிகாரிகள் இவ் பகுதியில் பணியாற்றிக் கொண்டு இருக்கின்றீர்கள். அத்துடன் அனுபவம் வாய்ந்தவர்களாகவும் இருக்கின்றீர்கள்.

மன்னார் மாவட்டத்தின் தேவைகள நன்கு அறிந்தவர்களாகவும் இருக்கின்றீர்கள். இந்த நிலையில் நீங்கள் உங்கள் வருடாந்த திட்டங்களை தயாரிக்கும்போது நீங்கள் அப்பகுதி மக்களுடன் நன்கு ஆராயப்பட்டு அவர்களால் முன்னுரிமைப்படுத்தப்பட்ட தேவைகளை இனம் கண்டு செயல் வடிவம் கொடுக்க வேண்டும்.

இங்குள்ள அரசு சார்பற்ற நிறுவனங்களை நான் இன்று ஒன்றுகூட்டியுள்ள நோக்கம் அடுத்த வருடம் (2021) உங்களின் செயல்பாடு என்னவாக இருக்கப் போகின்றது என்பதை நாங்களும் அறியக்கூடிய தேவைப்பாடுகளாகவும் இருக்கின்றது.

உங்களால் மேற்கொள்ளப்பட்ட இவ்வருட வேலைத் திட்டங்களை நீங்கள் இன்று சமர்பிக்கப் போகின்றீர்கள். அடுத்த வருடத் திட்டங்களையும் நீங்கள் எங்களிடம் சமர்பிக்க வேண்டிய அவசியம் உள்ளது.

மன்னாரில் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகள் நிறைய இருக்கின்றன. அதை நாங்கள் நிறைவேற்றிக் கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் தேவையற்ற செயல்பாடுகளையும் நீங்கள் முன்னெடுத்துச் செல்லலாம் அவற்றை நாங்கள் தவிர்த்து மக்களுக்கு தற்பொழுது எது மிக அவசியமாக இருக்கின்றதோ அவற்றை நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இதன் நோக்கமாகக் கொண்டே இவ் மீளாய்வு கூட்டம் அமைந்துள்ளது. அகவே உங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் 2021 ம் ஆண்டு அரச நிதியுடன் அரசு சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இங்கு அபிவிருத்தியை முன்னெடுத்துச் செல்லலாம் என்ற நம்பிக்கையுடன் உங்கள் ஒத்துழைப்பையும் வேண்டி நிற்கின்றேன் என்றார். (60)