மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக மா.தயாபரன் கடமைகளை உத்தியோகபூர்வமாகா பெறுப்பேற்றிருந்தார்.

(வவுணதீவு எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மாநகர சபையின் புதிய ஆணையாளராக கிழக்கு மாகாண ஆளுனரால் கடந்த வியாழக்கிழமை நியமிக்கப்பட்ட  மா.தயாபரன் திங்கட்கிழமை (07) திகதி தமது  கடமைகளை உத்தியோகபூர்வமாகா பெறுப்பேற்றிருந்தார்.
கிராம மட்ட பொது அமைப்புக்களின் வரவேற்புடன் பட்டாசு கொழுத்தி ஆரவாரத்துடன் அழைத்து வரப்பட்ட ஆணையாளரை மாநகர சபையின் பிரதி மேயர் கந்தசாமி சத்தியசீலன் தமைமையிலான குழுவினர் மலர் மாலை அணிவித்து வரவேற்றனர்.
இடம் பெற்ற அமேக வரவேற்பின் பின்னர் புதிய ஆணையாளர் மாநகர சபை வளாகத்தில் அமைந்துள்ள விநாயகர் ஆலயத்தில் இடம்பெற்ற பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டதுடன், பயன் தரும் மரக்கன்றினையும் நாட்டிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து  புதிய ஆணையாளர் சுபவேளையில் கையொப்பமிட்டு தனது கடமைகளை உத்தியோக பூர்வமாக பெறுப்பேற்றுக்கொண்டார்.