களுவாஞ்சிக்குடியில் பொலிசார் ஒருவருக்கு கொரனா தொற்று.

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர்  கொரனா தொற்றுக்கள்ளாகியுள்ளதாக மாகாண சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி  ஆதார வைத்தியசாலையில் தங்கிருந்து   காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்றுவந்தபோதே இவருக்கான தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து களுவாஞ்சிக்குடி பொலிஸ்நிலையத்தை தற்காலிகமாக மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் நாளை குறிப்பிட்ட பொலிஸ் நிலையத்தில் கொரனாவுக்கான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

இதேவேளை இன்றைய புதிய தொற்றுன்  கிழக்கில் தொற்றாளர்களின் எண்ணிக்கை332ஆக அதிகரித்துள்ளது.

இன்று மட்டும்  13 பேர் வற்றுக்குள்ளாகியுள்ளனர் இதில் அக்கரைப்பற்று 11,அட்டாளச்சேனை01,களுவாஞ்சிக்குடி ஒன்று என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.