பசுமையான கிழக்கு மரம் மண்ணின் வரம்-மரம் வளர்ப்பதே மனித அறம்”

(எஸ்.அஷ்ரப்கான் – )
பசுமையான கிழக்கு எனும் ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு அமைய மத்திய முகாம் மூன்று கிராம உத்தியோகத்தர் பிரிவில் “மரம் மண்ணின் வரம்-மரம் வளர்ப்பதே மனித அறம்” எனும் மர நடுகை நிகழ்ச்சி திட்டத்தினால் கிராம அபிவிருத்தி சங்கத்தின் ஊடாக பயனாளிகளுக்கு மரக்கண்டுகள் இன்று (04) வழங்கி வைக்கப்பட்டது.
நவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ். ரங்கநாதன் அவர்களின் ஆலோசனைக்கு அமைய கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜி.ஜெயகாந்த், அபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.லோகிதராஜ், கிராம உத்தியோகத்தர் கே.மதன், கிராம அபிவிருத்தி சங்க தலைவர் எம்.எச்.அலியார், பட்டதாரி பயிலுனர்கள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.