கல்முனைபிராந்தியத்தில் இன்று29 புதிய தொற்றுக்கள்  மொத்தம் 191.அக்கரைப்பற்று உப கொத்தணி 164

 

கல்முனை  பிராந்திய சுகாதாரபணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில்  இன்று 29பேர் புதிய தொற்றுக்குள்ளாகியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர்  குண சுகுணன் தெரிவித்தார்.

இதில்12பேர் அக்கரைப்பற்றிலும் , 13பேர் அட்டாளைச்சேனையிலும்  கல்முனைவடக்கு 01, ஆலையடிவேம்பு 02, திருக்கோவில்01 என இனம் காணப்பட்டுள்ளார்.

இதன்படி  இன்று வரை கல்முனைப்பிராந்தியத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

அக்கரைப்பற்று சந்தை ஊடாக தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 164  ஆக உயர்வடைந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெலியகொட கொத்தணி ஊடாக இதுவரை கிழக்கில்தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 303 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.