சுவதாரிணி நோய் எதிர்ப்பு பானம் வழங்கி வைப்பு

பைஷல் இஸ்மாயில் –
கோவிட் 19 தொற்றிலிருந்து மக்களைப் பாதுகாக்கும் நோக்கில் “சுவதாரிணி” ஆயுர்வேத பாரம்பரிய நோய் எதிர்ப்பு பானங்களை நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம்.நக்பரினால் அம்பாறை மாவட்டம் முழுவதும் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றது.
அதற்கமைய நேற்றைய தினம் (02) வியூகம் ஊடக குழுமத்தினருக்கான “சுவதாரிணி” ஆயுர்வேத பாரம்பரிய நோய் எதிர்ப்பு பானங்களை அதன் பணிப்பாளர் சம்சுதீன் ஜனூஸிடம் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர் வழங்கி வைத்தார்.
சுகாதார சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜெயக்கொடியின்  வழிகாட்டலில் கீழ் நிந்தவூர் ஆயுர்வேத தொற்றா நோய் ஆராய்ச்சி வைத்தியசாலை இச்சேவையை முற்றிலும் இலவசமாக முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வருகின்றது.