எமது சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் மனிதாபிமான மனிதநேயப் பணிகளில் ஒன்றாக மட்டக்களப்பு பட்டிப்பளை பிரதேச செயலகத்திற்குட்பட்ட முனைக்காடு வடக்கு கிராமத்தில் வசிக்கும் திரு.திருமதி.நவரெட்ணம்- தயாசீலன் குடும்பத்திற்கு புதிய வீடு ஒன்று அமைக்கப்பட்டு 02.12.2020 இன்று குறித்த வீடு மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை பிரதேச செயலாளர் திருமதி.தெட்சணகெளரி தினேஷ் அம்மணி மற்றும் கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அவர்களினால் திறந்து வைக்கப்பட்டு இக்கிராமத்துக்கு பொறுப்பான கிராம சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புக்கள் மற்றும் பொதுமக்களின் முன்னிலையில் உத்தியோகபூர்வமாக அவர்களிடம் கையளிக்கப் பட்டிருந்தது.
மூன்று பெண்குழந்தைகளோடு ஐந்து குடும்ப அங்கத்தவர்களைக் கொண்ட குறித்த குடும்பம் மிகவும் வறுமையான நிலையில் செய்வதறியாது ஓர் சிறிய ஓலை குடிசையில் வசித்து வந்ததை இணைய தொலைக்காட்சியான படகு தொலைக்காட்சி வெளிக் கொண்டு வந்ததனை கண்ணுற்ற எமது சமத்துவ மக்கள் நல ஒன்றியத்தின் ஐரோப்பிய நாடுகளுக்கான இணைப்பாளர் திரு.இரா.விஜயகுமாரன் அண்ணா அவர்களின் முழுமுயற்சியோடும், ஆதரவோடும் சுவிஸ் நாட்டில் வாசிக்கும் தாயகத்தைச் சேர்ந்த அவரது நண்பர்களான திரு.சு.சுரேஸ் ( வாசவிளான்- யாழ்ப்பாணம்)
திரு.ஐ.கணேஷமூர்த்தி (சுன்னாகம்-யாழ்ப்பாணம்)
லண்டனில் வசிக்கும திரு.யோ.ஜெயராஜ் (ஆஜா- ஓந்தாச்சிமடம் மட்டக்களப்பு)
திரு.வா.கருணாநிதி (வசவிளான்-யாழ்ப்பாணம்)
திரு.ஐ.கங்காதரன் (காரைநகர்-யாழ்ப்பாணம்)
திரு.ச.பன்னீர்செல்வம் (புங்குடுதீவு-யாழ்ப்பாணம்)
திரு.எஸ்.பி.சுந்தரலிங்கம் (பூனாய்-யாழ்ப்பாணம)
திரு.யே.நேசன் (ஏழாலை-தெற்கு,ஏழாலை)
திரு.ச.சதிஷ் (பாண்டிருப்பு-கல்முனை)
திரு.த.தயாளன் (மட்டக்களப்பு)
திரு.ப.சந்திரன் (அரியாலை-யாழ்ப்பாணம்)
திரு.த.இளங்குமரன் (வசவிளான்-யாழ்ப்பாணம்)
Mrs.Pecanni Cevsere (சுவிஷ்)
ஆகியோரின் விஷேட பங்களிப்புடன் 390,780.00 ரூபா நிதியுதவியோடும் அனைத்தும் பூர்த்தியாக்கப்பட்டு
குறித்த வீடு அமைத்துக் கொடுக்கப்பட்டதுடன் வீட்டிற்கான மின்னிணைப்பு பெறுவதற்கான ஏற்பாடுகளை சவூதி நாட்டில் வசிக்கும் திரு.து.டுதீஸ்வரன் அவர்களுடன்வழங்கி இருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.