அக்கரைப்பற்றில் தொற்று நீக்கும் செயற்பாடுகள் ஆரம்பம்

எம்.எல்.சரிப்டீன்)
அக்கரைப்பற்று பிரதேசங்களில் கொரோனா வைரசில் இருந்து பாதுகாப்புபெற தொற்று நீக்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அக்கரைப்பற்று மாநகர முதல்வர் அதாஉல்லா  அகமட் ஸகியின் வேண்டுகோளின் பேரில் சுகாதரா அதிகாரிகளினால் அக்கரைப்பற்று பஸ் நிலையம், மீன் சந்தை, பிரதான சந்தை என்பன தொற்று நீக்கப்படுவதனை படங்களில் காணலாம். மேலும் பல பிரதேசங்கள் தொற்று நீக்கப்படவுள்ளது.
குறிப்பு.
குறிப்பிட்ட இரு படங்களிலும் தொற்று நீக்கம் செய்யும் ஊழியர் தனக்கான பாதுகாப்பு அங்கியை அணிந்திருந்தாலும் கால்களை மறைக்ககூடிய சப்பாத்தையோ  அல்லது காளுறையோ அணியவில்லை.மற்றவர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கச்சென்று தன்னுடைய பாதுகாப்பை இழக்கும் நிலை ஏற்படக்கூடாது என்பது எமது தாழ்மையான கருத்து.  சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவ்வாறான விடயங்களிலும் கவனம் செலுத்தினால் நன்று. ஆசிரியர்