மாவட்ட அரசாங்க அதிபர்
ஹஸ்பர் ஏ ஹலீம்_
புறவி சூறவாளியிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கான சகல ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.
மாவட்டத்தில் 237 தற்காலிக இடைத்தங்கல் நிலையங்கள் இதுவரை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இவற்றுள் 21820 குடும்பங்களை சேர்ந்த 75000 அங்கத்தவர்கள் தங்க முடியும்.குறிப்பாக கரையோரங்களில் உள்ள மக்களை பாதுகாக்க அவர்களை ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இடைத்தங்கல் நிலையங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதுகாப்பான இடைத்தங்கல் முகாம்களுக்கு வரும் மக்களுக்கான உணவுத்தேவை உட்பட ஏனைய சுகாதார விடயங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
முப்படை, பொலிசார் , சிவில் பாதுகாப்புபடை, பிரதேச செயலாளர்கள் உட்பட உரிய அனைத்து தரப்பினருக்கும் செயற்பட வேண்டிய நிலமை குறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளது.கொவிட் 19 அவதான நிலையை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளை பின்பற்றி உரிய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.