அரச அதிபர் ஸ்ரான்லி டிமெல் சம்பவ இடங்களில்.
( வாஸ் கூஞ்ஞ)
இன்று புதன் கிழமை (02.12.2020) பிற்பகல் வரை புரேவி புயல் காரணமாக மன்னாரில் தொடர்ச்சியாக பெய்து வந்த மழை மற்றும் அதிவேக காற்றின் காரணமாக கடல் நீர் வீடுகளுக்குள் உட்புகுந்தமையால் விடத்தில் தீவு பகுதியில் 6 குடும்பங்கள் வெளியேறியதுடன் மேலும் 20 குடும்பங்கள் வெளியேறும் அபாயத்தில் இருந்தமையாலும்
தேவன்பிட்டியில் கடல்நீர் உட்புகுதலால் 15 குடும்பங்களும் வங்காலை பகுதியில் 5 குடும்பங்களும் தங்கள் இருப்பிடங்களை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்ட நிலையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரானி டிமெல் சம்பவ இடங்களுக்கு மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் எஸ்.திலீபன் சகிதம் பார்வையிட்டு வருவதையும் அவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாகச் சென்று மேற்கொள்வதையும் படங்களில் காணலாம்