(ஹஸ்பர் ஏ ஹலீம்_ பொன் ஆனந்தம்)
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் இன்று (02)காலை திருகோணமலையின் வடக்கு கடற்கரையில் உள்ள பல கிராமங்களுக்கு விஜயம் செய்தார்.
அதன்படி, திருகோணமலை வடக்கு கடற்கரை பகுதி, சிறிமாபுர மற்றும் திருக்கடலூர் கிராமங்களில் ஆளுநர் விஜயம் செய்து அங்கிருக்கும் நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்
அவதானிப்பு சுற்றுப்பயணத்தின் நோக்கம், அந்த பகுதிகளில் வாழும் மக்களை சூறாவளியால் ஏற்படக்கூடிய பேரழிவுகளிலிருந்து முன்கூட்டியே மீட்பது மற்றும் பாதுகாப்பான இடங்களுக்கு அவர்களை வழிநடத்துவதாகும்.
இதுபோன்ற பேரழிவு ஏற்படுவதற்கு முன்னர் மக்கள் எங்கிருக்கிறார்கள் என்று விசாரிக்க ஆளுநர் இப்பகுதிக்கு வருவது இதுவே முதல் முறை.
பலத்த மழை இருந்தபோதிலும், மக்கள் தங்கள் வீடுகளுக்குச் சென்று பிற்பகலுக்குள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஆளுநர் அறிவுறுத்தினார்