(யு.எல்.அலி ஜமாயில்
கல்முனை ஸாஹிராக் கல்லூரியின் பழைய மாணவரும் நிந்தவூரை பிறப்பிடமாக கொண்டவருமான நீதியரசர் திலிப் நவாஸ் அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் உயர்நீதிமன்ற நீதிபதியாக இன்று நியமனம் பெற்றார். பாடசாலை சமூகம் இவரை மனதார வாழ்த்துகிறது.
நீதிபதி திலிப் நவாஸ் அவர்களுக்கு அண்மையில் கல்முனை ஸாஹிராக் கல்லூரியில் கல்வி கற்று நீதித்துறையில் உச்ச பதவி பெற்றமைக்காக ஸாஹிரா சரித்திர நாயகர்(Zahira Legend) விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.