காரைதீவு நிருபர் சகா
இ.கி.மிசன் துறவி ‘சேவையின் சிகரம்’ சுவாமி நடராஜானந்தா ஜீயின் 117வது ஜனனதினம் நேற்று(29) ஞாயிற்றுக்கிழமை அவர் பிறந்த காரைதீவில் சமகாலசூழ்நிலைகருதி எளிமையாக கொண்டாடப்பட்டது. அவரது திருவுருவச்சிலை அமைந்துள்ள காரைதீவு பிரதேசசெயலக முன்றலில் இந்துசயமவிருத்திச்சங்கம் நடாத்திய அந்நிகழ்வில் குடும்ப உறுப்பினர்கள் சங்கஉறுப்பினர்கள்கலந்துகொண்டு மலர்மாலை அணிவித்து புஸ்பாஞ்சலி செலுத்திபஞ்சராத்தி காட்டி வழபாடு நடைபெறுவதைக்காணலாம்.