மட்டு.சிறைச்சாலையில் 100 கைதிகளுக்கு கொரோனா அன்டிஜன் பரிசோதனை—ஒருவருக்கும் தொற்று இல்லையென முடிவு

Corona virus test kit - Swab sample for PCR DNA testing
ரீ.எல்.ஜவ்பர்கான்–மட்டக்களப்பு
மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள சிறைக்கைதிள் 100 பேரிடம்  நேற்று காலை மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் கொரோனா பரிசோதனையின்போது ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்படவில்லையென கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் தெரிவித்தார்
மட்டக்களப்பு சுகாதாரவைத்தியதிகாரி டாக்டர் பி.கிரிசுதன் தலமையில் நடைபெற்ற பிரிசோதனையில் மாவட்ட தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் எம்.குணரத்தினம் உட்பட பொது சுகாதார பரிசோதகர்களும் சிறைச்சாலை அதிகாரிகளும் கலந்து கொண்;டனர்.
பீ.சீ.ஆர் பிரிசோதனைக்கு ஒப்பாக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சுமார் 20 நிமிடங்களில் கிடைத்து விடுமென சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதற்கமைய சிறைக்கைதிகளிடம் மேற்கொள்ளப்பட்;ட அன்டிஜன் பரிசோதனை முடிவுகள் 20 நிமிடங்களில் வெளயிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.