மகர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலின் போது காயமடைந்த கைதிகள் குழு ராகம மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 71 பேரில் 48 பேருக்கு விரைவான ஆன்டிஜென் பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 26 பேருக்கு கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாகவும் மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் சரத் பிரேமசிறி தெரிவித்தார்.
சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 71 பேரில் 10 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று துணை இயக்குநர் மேலும் தெரிவித்தார்