அக்கரைப்பற்றில் மேலும் 13பேருக்கு கொரனா தொற்று.

கல்முனை பிராந்திய சுகாதார பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று சுகாதாரப்ப்பிரிவில் மேலும் 13பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் குண சுகுணன் தெரிவித்தார்.

கடந்த 27ம் திகதி பெறப்பட்ட மாதிரிகளின் அடிப்படையில் 68 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட  பரிசோதனை மாதிரிகளில் இன்று 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்றுக்குள்ளானவர்களில் பெரும்பாலானோர் ஏற்கனவே தொற்றுக்குள்ளானவர்களின் உறவினர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

இன்றையநிலவரத்தின்படி கல்முனை பிராந்தியத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்வடைந்துள்ளது.