மயிலத்தமடு பிரதேசத்தில் திட்டமிட்ட குடியேற்றம் எங்கள் மேய்ச்சல் தரைகளை மீட்டுத்ததாருங்கள்

மயிலத்தமடு பிரதேசத்தில் திட்டமிட்ட குடியேற்றம் எங்கள் மேய்ச்சல் தரைகளை மீட்டுத்ததாருங்கள் என பண்னையாளர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மயிலத்தமடு பிரiதேசத்தில் மேச்சல் தரைக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் சிங்கள மக்கள் அத்துமீறி பயிரசெய்கை மேற்கொள்ளும் இடங்களை நேற்று (28/11/2020) தமிழ்தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேதரதிரன், சீ.யோகேஷ்வரன்,ஞா.ஶ்ரீநேசன். முன்னாள் கிழக்குமாகாணசபை உறுப்பினர் இ.பிரசன்னா, மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் தி.சரவணபவான்,, இளைஞர் அணி தலைவர் கி.சேயோன், மாநகரசபை உறுப்பினர் மதன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் வாலிபர் அணி உறுப்பினர்கள் என பலரும் நேரில் சென்று மாடுவளர்ப்பு பண்ணையாளர்களுடன் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.

இக்கலந்துரையாடலின்போதே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பண்ணையாளர்கள் இங்கு கருத்துதெரிவிக்கையில்

எங்களின் உண்மை நிலையை நேரில்வந்து பார்த்தமைக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.மட்டக்களப்பு மாவட்டத்தில் எங்கள் பாட்டன் பூட்டன் காலம் தொடக்கம் மாட்டுப்பட்டிவளர்ப்பு  எமது வாழ்வோடு இரண்டற கலந்த ஒன்றாக உள்ளது.

மாநாவாரி நெற்செய்கை ஆரம்பிக்கும்போது மூன்று மாதங்கள் மாடுகளை மேய்ப்பதற்கான இடமாக மயிலத்தமடு பகுதி காடுகள் பூர்வீகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளது.

ஆனால் தற்போது அம்பாறை பொலன்றுவை மாவட்டங்களை சேர்ந்த சிங்கள மக்களை திட்டமிட்டு குடியேற்றி சேனைப்பயிர்செய்கைக்காண ஆயிரக்கணக்காண ஏக்கர் நிலங்கள் பகிர்நதளிக்கப்பட்டு ஒரு திட்டமிட்ட குடியேற்றம் மேற்கொள்ளப்படுகிறது.

இது விடயமாக அதிகாரிகள் அரச அதிபர் கிழக்கு ஆளுநர் அரசியல் பிரமுகர்கள் என பலரிடமும் தெரிவித்தும் எந்த பலனும் இல்லை எனவே நேரில் பார்வையிட வந்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பு பிரமுகர்களான நீங்கள் எப்படியும் எமது மேச்சல்தரை காணிகளை மீட்டுத்தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.