சண்முகம் தவசீலன்
ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் நோயாளர் காவு வண்டி மீது நடத்திய கிழைமோர் தாக்குதலில் உயிரிழந்த மாணவர்கள் உள்ளிட்ட 8 பேரின் 13 ஆம் ஆண்டு நினைவு நினைவு தினம் இன்றாகும்
உயிரிழந்த பாடசாலை மாணவர்களின் அஞ்சலி நிகழ்வை கூட விட்டு வைக்காது உயிரிழந்த மாணவர்களின் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு அஞ்சலி செய்யவிடாது தடுப்பது ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை மீறி இந்த அரசு காட்டாட்சி நடத்துவதாகவே அர்த்தப்படும் என துணுக்காய் பிரதேச சபை உறுப்பினர் ச.சுஜன்சன் தெரிவித்திருந்தார்
முல்லைத்தீவு ஜயன்கன்குளம் பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையினரின் நோயாளர் காவு வண்டி மீது நடத்திய கிழைமோர் தாக்குதலில் ஆறு மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் இருவர் உள்ளிட்ட 8 பேர் உயிரிழந்தனர்
இராணுவத்தினரின் இந்த தாக்குதலால், அந்த நோயாளர் காவுவண்டியில் பயணித்த பாடசாலை சீருடையுடன் சென்ற மாணவிகளான நாகரத்தினம் பிரதீபா (வயது-16), நாகரத்தினம் மதிகரன் (வயது-15), நித்தியானந்தன் நிதர்சனா (வயது-13), கருணாகரன் கௌசிகா (வயது-15), சந்திரசேகரம் டிறோஜா (வயது-16), அற்புதராசா அஜித்நாத் (வயது-17)ஆகிய ஆறு மாணவிகள் மற்றும் சுகாதாரத் தொண்டர்கள் சண்முகவடிவேல் சகுந்தலாதேவி (வயது-19), மாரிமுத்து கிருஸ்ணவேணி (வயது-21) ஆகியோருமாக எட்டுப்பேர் படுகொலை செய்யப்பட்டனர்
குறித்த உறவுகளின் 13 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு இன்றாகும்
ஐயன்கன்குளம் மயானத்தில் குறித்த மாணவருக்கான நினைவேந்தல் நிகழ்வையும் தடைசெய்துள்ளனர்
அதனைவிட உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்களையும் போலீசார் மற்றும் புலனாய்வாளர்கள் குறித்த மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளுக்கான தடை உத்தரவுகளை பெற்றோர்களிடம் ஒப்படைத்து நிகழ்வினை செய்யக்கூடாது என அச்சுறுத்தி உள்ளனர்
இந்நிலையில் குறித்த சம்பவத்தில் உயிரிழந்த பிள்ளைகளின் பெற்றோர்கள் சிலர் தங்களுடைய வீடுகளில் தங்களுடைய பிள்ளைகளின் புகைப்படங்களை வைத்து அதற்கான மலர் தூவி அஞ்சலி செலுத்தி அவர்களுக்கான அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்